கண்கவர் வான வேடிக்கைகளுடன் நியூசிலாந்தில் பிறந்தது 2019!
நியூசிலாந்து மக்களின் உற்சாக வரவேற்போடு அந்நாட்டில் 2019ம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ளது.
வெலிங்டன்: நியூசிலாந்து மக்களின் உற்சாக வரவேற்போடு அந்நாட்டில் 2019ம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ளது.
உலகில் சூரியன் உதிக்கும் முதல் நாடான நியூசிலாந்து, பூமிப்பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரலேசியா, ஓசியானியா கண்டத்தில் அமைந்துள்ளது.
இந்தியாவைவிட ஏழரை மணிநேரம் முன்னே சென்று கொண்டிருக்கும் நியூசிலாந்தில், இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில்(அங்கு நள்ளிரவு 12 மணி) 2019ம் ஆண்டு பிறந்துள்ளது.
#HNY from #Auckland #Newzealand @skytower pic.twitter.com/aF2MXRjJts
— VoyageToTheHeart (@UnifiedLove) December 31, 2018
புத்தம் புதிய ஆண்டை, ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை என அந்நாட்டு மக்கள் கோலாகலமாக வரவேற்று மகிழ்ந்தனர். கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.
¡Llega el año nuevo a Nueva Zelanda!
¡¡Feliz 2019!! pic.twitter.com/x85HZVtdjk
— Imágenes Históricas (@HistoriaEnFotos) December 31, 2018
மேலும், இந்திய நேரப்படி நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக இன்றிரவு சுமார் 8.30 மணியளவில் ஜப்பான் நாட்டு மக்கள் புத்தாண்டை கொண்டாட காத்திருக்கின்றனர்.