இளவரசியின் ஆடைகள் 3வது முறை ஏலம் ! ஆரம்ப விலை ரூ. 3.24 கோடிதான்… நீங்கள் தயாரா?

இளவரசியின் ஆடைகள் 3வது முறை ஏலம் ! ஆரம்ப விலை ரூ. 3.24 கோடிதான்… நீங்கள் தயாரா?

பிரிட்டன் இளவரசியாக இருந்து அகால மரணம் அடைந்த டயானாவின் உடைகள் 3வது முறையாக ஏலம் விடப்பட உள்ளது. உலக வரலாற்றில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டயானா 1997ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணச் செய்தி கேட்டு கோடானு கோடி மக்கள் தங்களது துயரத்தை வெளிப்படுத்தினர். அவர் பயன்படுத்திய உடைகள், பொருட்கள் அவ்வப்போது ஏலம் விடப்பட்டு அந்த ஏலத் தொகை சில தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.

diana

1985ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹாலிவுட் நடிகர் ஜான் ட்ரோவல்டாவுடன் நடனம் ஆடியபோது, இளவரசி டயானா அணிந்திருந்த நீலநிற வெல்வெட் கவுன் ஏலத்திற்கு வந்துள்ளது. மேலும் டயானாவின் மேலும் இரண்டு உடைகளும் ஏலத்திற்கு விடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டயானாவுக்கு மிகவும் பிடித்தமான நீலநிற வெல்வெட் கவுன் இதற்கு முன்னர் 2முறை ஏலத்திற்கு விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

diana

புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் தொண்டு நிறுவனங்களுக்காகப் பணம் திரட்டும் வகையில் 1997ஆம் ஆண்டு டயானா இறப்புக்கு 2 மாதங்களுக்கு முன்பு, ஏலம் விடப்பட்டது. அதை அடுத்து 2013ஆம் ஆண்டு பிரிட்டன் தொழிலதிபர் ரூ.2.22 கோடிக்கு டயானாவின் கவுனை ஏலம் எடுத்தார். இப்போது கெர்ரி டெய்லர் நிறுவனம் சார்பாக நடைபெறும் ‘பேஷன் ஃபார் ஃபேஷன்’ ஏலத்தில் மூன்றாவது முறையாக டயானாவின் நீலநிற கவுன் ஏலத்திற்கு வர உள்ளது.
இதன் ஆரம்ப விலை ரூ. 3.24 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முறை நீலநிற கவுனை பெறப்போகும் தொழிலதிபர் யார் என்பதை தெரிந்து கொள்ள பிரிட்டன் மக்கள் ஆவலாக உள்ளனர்.