இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: தற்கொலை படையினர் உட்பட 15 பேர் உயிரிழப்பு; கதறும் மக்கள்!

 

இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: தற்கொலை படையினர் உட்பட 15 பேர் உயிரிழப்பு; கதறும் மக்கள்!

இலங்கையில் நேற்றிரவு நடந்த குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கல்முனை: இலங்கையில் நேற்றிரவு நடந்த குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கையில் கடந்த 21 ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று  பல்வேறு இடங்களில்  தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள்  நடந்தேறியது. இதில் 300ற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 500ற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனால் இலங்கையில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 

srilanka

இந்நிலையில், இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்ற அம்பாறை மாவட்டம் – கல்முனை சாய்ந்தமருது பகுதியில் அதிரடிப் படையினருக்கும், ஆயுத குழுவினருக்கும்  இடையே நேற்றிரவு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதனால் அங்கு மீண்டும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இலங்கையில் நேற்று  இரவு 10 மணி முதல் நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபர்கள் தப்பிச் சென்றனர்.

srilanka

தொடர்ந்து அந்த ஆயுத குழுவிடமிருந்து 150 ஜெலட்டின் குச்சிகள், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் சீருடை, டுரோன், வேன் மற்றும் லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அங்குத் தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. 

srilanka

இந்நிலையில் கல்முனை பகுதியில் ஒரு வீட்டிலிருந்து பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது. இதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதில்  4 பேர் தற்கொலை படையினர் என்று அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திலிருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், இலங்கையில் மறுபடியும் அரங்கேறியுள்ள இந்த பயங்கர தாக்குதலால் மக்கள் பீதியில் உள்ளனர்.