அதிபர் சிறிசேனாவின் உத்தரவு செல்லாது: இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி!

 

அதிபர் சிறிசேனாவின் உத்தரவு செல்லாது: இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி!

இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பிறப்பித்த உத்தரவை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கொழும்பு: இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பிறப்பித்த உத்தரவை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் நியமித்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவிட்டது முதல் அரசியல் குழப்பங்கள் நீடித்து வருகிறது.

பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதால், பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதிபர் சிறிசேனாவின் அந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் பெரும்பான்மை பலம்மிக்க மூன்று பிரதான எதிர்க்கட்சிகள் மனு தாக்கல் செய்திருந்தன.

அந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி நலின் பெரேரா தலைமையிலான அமர்வு, “பாராளுமன்றம் கலைத்து உத்தரவிட்ட மைத்ரிபாலா சிறிசேனாவின் நடவடிக்கை செல்லாது என்றும், பாராளுமன்றம் கலைப்பு தொடர்பாக அரசு பிறப்பித்த அறிவிக்கையை ரத்து செய்வதாகவும்” உத்தரவிட்டுள்ளது.

அதோடு மட்டுமின்றி, ஜனவரி 5-ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்துவதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.