நாய்கள் பயணம் செய்ய பிரத்யேக விமான சேவை அறிமுகம்

 
dog airlines

செல்லப்பிராணியான நாய்கள் பயணம் செய்ய ஏதுவாக பிரத்யேக சொகுசு விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பட்டை காற்று

உலகிலேயே முதன்முறையாக விமானத்தில் நாய்கள் ஒய்யாரமாக பயணம் செய்யும் வகையில் சகல வசதிகளுடன் பிரத்யேகமாக விமான சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை BARK AIR என்ற நிறுவனம் வழங்கிவருகிறது. இதில் நாய்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் அதற்கு துணையாக உரிமையாளரும் பயணம் செய்துகொள்ளலாம். அதெற்கென சவுகரியமான இருக்கை, படுக்கை வசதி, டயப்பர்களும் வழங்கப்படுகின்றன. டிக்கெட் விலை உள்நாட்டு பயணத்திற்கு ரூ.4 லட்சமும், வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.6 லட்சமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது அமெரிக்காவின் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் லண்டன் ஆகிய நகரங்களில் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பகுதிகளிலும் விரைவில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.