கொரோனா தடுப்பு மருந்து: கைவிரித்த உலக சுகாதார நிறுவனம்

 

கொரோனா தடுப்பு மருந்து: கைவிரித்த உலக சுகாதார நிறுவனம்

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து ஆராய்ச்சிகளில் உடனடியான தீர்வு தற்போதைக்கு கிடைக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், மனித உடலில் கொரோனா வைரஸுக்கான நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து வருவதாகக் கூறினார். இருப்பினும், தடுப்பு மருந்து ஆராய்ச்சிகளில் தற்போதைக்கு உடனடியான, அதீத பலன் தரக் கூடிய வகையிலான முன்னேற்றம் ஏற்படவில்லை என அவர் கவலை தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்து: கைவிரித்த உலக சுகாதார நிறுவனம்

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டாலும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதை நிறுத்த வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். கொரோனா வைரஸ் உருவான விதம் குறித்து ஆய்வு செய்து வரும் உலக சுகாதார அமைப்பு, முதற்கட்ட விசாரணையை முடித்துள்ளது. விலங்குகளில் இருந்து வைரஸ் வெளிப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக முதற்கட்ட விசாரணை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. எனிலும், விரிவான சர்வதேச அளவிலான விசாரணையை அந்த அமைப்பு முன்னெடுக்க உள்ளது.