டிரம்ப் அறிவிப்பால் விபரீதம்...8வது மாதத்திலேயே மருத்துவமனையில் குவியும் கர்ப்பிணிகள்!

 
trump

அமெரிக்காவில் தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் இனிமேல் பிறப்பால் அமெரிக்கர் என்ற குடியுரிமையை பெற முடியாது என அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடையே சிசேரியன் அதிகரித்துள்ளது. 

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். இதனை தொடர்ந்து அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்ற முதல் நாளே  சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த நபர்களை வெளியேற்றுதல், ஆண் மற்றும் பெண் என இரு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும், மூன்றாம் பாலினத்தவரை பாலின பட்டியலில் இருந்து நீக்குதல் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று உட்பட சர்வதேச அளவில் பல நோய் தொற்றுகளை  உலக சுகாதார நிறுவனம் தவறாக கையாண்டதால் அதிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். இதேபோல் பிறப்பால் குடியுரிமை கிடையாது என்ற உத்தரவையும் போட்டுள்ளார். அமெரிக்காவில் தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் இனிமேல் பிறப்பால் அமெரிக்கர் என்ற குடியுரிமையை பெற முடியாது எனவும் அறிவித்தார். இந்த உத்தரவு பிப்ரவரி 20ம் தேதி அமலுக்கு வருகிறது. 

இந்த நிலையில், அதிபர் டிரம்பின் இந்த உத்தரவால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடையே சிசேரியன் அதிகரித்துள்ளது. பிப்ரவரி 20ம் தேதி உத்தரவு அமலுக்குள் வரும் நிலையில், அதற்கு முன்னதாகவே குழந்தை பெற்றுக்கொள்ள கர்ப்பிணிகள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.  8வது மாதத்திலேயே குழந்தை பெற்றுக் கொள்ள கர்ப்பிணிகள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.