ஓமன் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் - 3 பேர் உயிரிழப்பு
ஓமன் கடல் பகுதியில் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஈரான் துறைமுகங்களில் இருந்து கப்பல் போக்குவரத்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், ஈரானில் இருந்து புஜைராவுக்கு எண்ணெய் ஏற்றிச் சென்ற MT Settebello கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. அக்கப்பலில் இருந்து வந்த அவசர அழைப்பின் அடிப்படையில் ஓமன் கடற்படை விரைந்து செயல்பட்டு, 21 இந்திய மாலுமிகளை மீட்டுள்ளது. மூவர் காணாமல் போன நிலையில் அவர்கள் அமெரிக்காவின் தாக்குதலில் படுகொலையாகியுள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதில் ஒரு கடற்படை வீரர் 23 வயது ஆதித்ய ஷர்மா. இதற்கு பிரதமர் மோடி இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்த வாரத்தில் மட்டும் இந்திய ஊழியர்களைக் கொண்ட மூன்று கப்பல்கள் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. ஓமன் கடற்கரை அருகே இந்தியக் குழுவினர் இருந்த கப்பல் மீது இரண்டு 'ஹெல்ஃபயர்' (Hellfire) ஏவுகணைகளைச் செலுத்தியதை அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் ஒப்புக்கொண்டது.

