எரிமலை வெடித்து பயங்கர சுனாமி- கடலாய் மாறிய தீவுகள்

 
volcano

தெற்கு பசிபிக் பெருங்கடலில் அழகிய தீவுக்கூட்டங்கள் அடங்கிய டோங்கா நாட்டை ச்னாமி பேரலை இன்று காலை தாக்கியது. சுனாமி பேரலை தாக்கியதற்கு காரணம் பசிபிக் பெருங்கடலின் கீழே அமைதியாக இருந்த எரிமலை வெடிப்புதான் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன. 

Tonga: Tsunami warning in American Samoa after Volcanic eruption, World  News Today

நீருக்கடியில் ஏற்பட்ட மாபெரும் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட சுனாமி, பசிபிக் நாடான டோங்காவை தாக்கியது.  எரிமலை வெடிப்பின்போது குண்டு வெடிப்பு ஏற்பட்டது போன்று சத்தம் எழுந்ததாகவும், சுனாமி பேரலையால் 60 தீவுகளுக்கு மேல் தண்ணீர் புகுந்ததாகவும் கூறப்படுகிறது.எரிமலையில் இருந்து வெளியேறும் வாயு, புகை மற்றும் சாம்பல் ஆகியவை வானத்தை 20 கிலோமீட்டர் தூரத்தை எட்டியுள்ளதாகவும், கடந்த 30 ஆண்டுகளில் டோங்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்பு இது என்றும் டோங்கா புவியியல் சேவைகள் தெரிவித்துள்ளன. எட்டு நிமிடங்கள் எரிமலை வெடித்ததாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டவுடன் அங்கிருந்த மக்கள், தங்கள் வாகனங்களை எடுத்துக்கொண்டு ஊரை காலி செய்துவிட்டு ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த எரிமலை மற்றும் சுனாமி பேரலையால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தாலும், உயிர் சேதம் தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை. தொடர்ந்து அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட வாய்ப்பிருக்கும் என்பதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


டோங்காவிலிருந்து 2,300 கிமீ தொலைவில் உள்ள நியூசிலாந்தில், வடக்கு தீவின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரையில் கடல் அலைகள் மிகவும் சீற்றமாக உள்ளது.