’அமெரிக்காவின் கொரோனா மரணங்களுக்கு ட்ரம்ப்தான் காரணம்’ ஜோ பைடன் குற்றச்சாடு

 

’அமெரிக்காவின் கொரோனா மரணங்களுக்கு ட்ரம்ப்தான் காரணம்’ ஜோ பைடன் குற்றச்சாடு

அமெரிக்காவில் தேர்தல் நடக்க இன்னும் ஓரிரு வாரங்களே உள்ளது. இந்நிலையில் அங்கு நடைபெறும் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் நிலையில் உள்ளது. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

’அமெரிக்காவின் கொரோனா மரணங்களுக்கு ட்ரம்ப்தான் காரணம்’ ஜோ பைடன் குற்றச்சாடு

அமெரிக்கத் தேர்தலில் முக்கியமான பேசுபொருளே கொரோனா பரவல் குறித்துதான். ட்ரம்ப் இவ்வளவு அலட்சியமாக பெருந்தொற்று நோயைக் கையாளலாமா? என்று எதிர்ப்புகள் வலுக்குகின்றன. இந்நிலையில் ட்ரம்ப்க்கே கொரோனா வந்தது பெரும் சோகம்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது ஜோ பைடன் கடும் குற்றசாட்டுகளை வைத்து வருகிறார். ட்ரம்ப்க்கு தொடக்கம் முதலே கடும் சவாலாக இருப்பது கொரோனா பற்றிய குற்றச்சாட்டுகளே. நேற்று டெட்ராய்ட் நகரில் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட ஜனநாயக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், ’தான் ஆட்சிக்கு வந்தால் தற்போது நடக்கும் இனப்பிரச்னைக்கு நல்லதொரு தீர்வு காண்பேன்” என்று கூறியுள்ளார். மேலும், “அமெரிக்காவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கொரோனா மரணங்களுக்கு அதிபர் ட்ரம்பே காரணம்” என்று கடும் குற்றச்சாட்டை வீசியிருக்கிறார்.

’அமெரிக்காவின் கொரோனா மரணங்களுக்கு ட்ரம்ப்தான் காரணம்’ ஜோ பைடன் குற்றச்சாடு

சில நாட்களுக்கு முன் ஒரு விவாதத்தில் கலந்துகொண்ட ஜனநாயக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரீஸ், ‘கொரோனாவை எதிர்கொள்ள ட்ரம்ப் அரசிடம் எவ்வித திட்டமும் இல்லை. அமெரிக்காவில் இதுவரை 70 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.