9 நிமிடங்கள் மட்டுமே நீடித்த திருமண வாழ்க்கை! தூக்கிலிடபட்ட கணவன் உடல்
ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர், தூக்கிலிடப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு காதலியை திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அலிரேஜா(25) என்பவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக சிறையில் இருக்கும் தனது காதலி 22 வயதான மஹ்சத் கேஷானியை திருமணம் செய்தார். அரசுக்கு எதிராக போராடியதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. காதலியின் கோரிக்கைக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியதை அடுத்து, தொலைபேசி வாயிலாகவே உறுதிமொழி ஏற்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமண உறுதிமொழிகளை வாசித்தபோது, இருவரின் தந்தையர்கள் தொலைபேசி மூலம் அதைக் கேட்டனர். அடையாளப் பரிசாக மஹ்சத் கேஷானிக்கு ஒரு குர்ஆன், ஒரு குங்குமப்பூ கற்கண்டு மற்றும் ஒரு சிவப்பு ரோஜா ஆகியவை வழங்கப்பட்டன. இந்தத் திருமணம் சுமார் ஒன்பது நிமிடங்கள் நீடித்தது. திருமணத்திற்கு பின்பு அவர் தூக்கிலிடப்பட்டார்.

