இந்தியா உடனான வர்த்தகம் என்பது ‘One Sided Disaster’- ட்ரம்ப்

 
trump

இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவை ‘ONE-SIDED DISASTER’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்தார்.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுகையில், “எந்த நாட்டிடமும் இல்லாதபடி, இந்தியா எங்களிடம் அதிக வரிகளை வசூலிக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளர் அமெரிக்காதான். எங்களிடம் அதிக பொருட்களை விற்கிறது. ஆனால் எங்களிடம் அவர்கள் வாங்குவதோ மிகக்குறைவு, இதுவரை இது ஒருசார்பு உறவாகவே இருந்துள்ளது. ஏனென்றால் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் பொருட்கள் விற்கவே முடியாத அளவுக்கு அவர்களது வரிகள் உள்ளன. இது ஒற்றை சார்பு பேரிழப்பு. இதுகுறித்து மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அதே நேரத்தில் பெரும்பாலான எண்ணெய், ரானுவ பொருட்களை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்குகிறது. அமெரிக்காவிடம் மிகக் குறைவாகவெ வாங்குகின்றனர். தற்போது வரிக்குறைப்பை முகக்குறைந்த அளவில் செய்துள்ளது. தங்களது இறக்குமதி வரியை குறைக்க இந்தியா முன்வந்துள்ளது. ஆனால் நேரம் கடந்துகொண்டே செல்கிறது. இதை பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். இந்தியாவின் வர்த்தகம் ஒருதலைபட்சமாக உள்ளது. இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவை ‘ONE-SIDED DISASTER’” என்றார்.