அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை

 
tik tok

டிக்டாக் தடையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவில் டிக்டாக் முடக்கப்பட்டது.

s

சட்ட விதிகளின்படி அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்கா முழுவதும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.
 
இதனையடுத்து அமெரிக்காவில் காலை 10.30 மணி வரை இயங்கிவந்த டிக்டாக் செயலி, திடீரென செயல் படாமல் போனது. டிக்டாக் செயலியில் "மன்னிக்கவும், TikTok இப்போது கிடைக்கவில்லை” என பாப்- பப் வந்ததால் பயனர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆப்பிள் மற்றும் கூகுளின் ஆப் ஸ்டோர்களில் இருந்து இந்த ஆப் மறைந்துவிட்டது. டிக் டாக் செயலியின் திடீர் மறைவானது 170 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே டிக்டாக் நிறுவனம், "அதிபர் ட்ரம்ப் பதவியேற்றவுடன் டிக்டோக்கை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான தீர்வில் எங்களுடன் இணைந்து பணியாற்றுவதாகக் கூறியது எங்களுக்கு அதிர்ஷ்டம். தயவுசெய்து காத்திருங்கள்!" எனக் கூறியுள்ளது.