உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியல் - இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

 
tn

ஒரு நாட்டின் மகிழ்ச்சியை குடிமக்களின் நல்வாழ்வு மதிப்பிடுகிறது. அரசாங்கங்கள் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மக்களின் மன நிறைவுக்கு பங்களிக்கும் காரணிகளை புரிந்து கொள்ளவும்,  முன்னேற்றம் தேவைப்படும் பகுதிகளை கண்டறியும் இது உதவுகிறது.  அந்த வகையில் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் எவை என்கின்ற சர்வேயில் பின்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது.  

tn

டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், இஸ்ரேல், நெதர்லாந்து, நார்வே, லக்சம்பர்க் ,ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் 10 இடத்தை பிடித்துள்ளன.  ஊழல் இல்லாதது நீண்ட ஆயுள் தங்கள் முடிவுகளை தாங்களே எடுப்பது உள்ளிட்ட வெவ்வேறு காரணிகளின் அடிப்படையில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த பட்டியலில் இந்தியா 126 ஆம் இடத்தை பெற்றுள்ளது.

tn

தொடர்ச்சியான மோதல் மற்றும் உறுதியற்ற தன்மை, பொருளாதார சவால்கள், அரசியல் ஸ்திரமின்மை, வரலாற்று இனப்படுகொலையை நீடித்த பின் விளைவுகள், நீடித்த மோதல், வன்முறை, அத்தியாவசிய சேவைகள் இல்லாமல் பொருளாதாரப் போராட்டங்கள், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான வரையறுக்கப்பட்ட அணுகல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.