பதவியில் இருந்து நீக்கப்படும் மகிந்த ராஜபக்சே??.. அதிபர் கோத்தபய ஒப்புதல் அளித்ததாக தகவல்..

 
இலங்கை பிரதமர்

இலங்கையில் மகிந்த ராஜபக்‌சேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க அதிபர் கோத்தபய ராஜபக்‌சே ஒப்புதல் அளித்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.  

இலங்கையில்  பணவீக்கம், கையிருப்புக் குறைவு, அந்நிய செலாவணி, சுற்றுலாத்துறை முடக்கம்   உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரலாறு காணாத  பொருளாதார ஏற்பட்டுள்ளது.   விலைவாசிகள் வின்னை முட்டும் அளவிற்கு   கடுமையாக உயர்ந்துள்ள நிலையில்,  அத்தியாவசிய பொருட்களான மருந்துகள்,  பால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு  போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு திணறி வருகிறது.   இதனால்  மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.  அத்துடன்  கோத்தபய ராஜபக்சே  அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் , கூட்டணிக்கட்சிகளும் சேர்ந்து  போர்க்கொடி தூக்கின.

கொந்தளிக்கும் மக்கள்.. திணறும் இலங்கை அரசு.. - அவசர நிலை பிரகடனம் வாபஸ்..

 அதன்பிறகு   இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர,  அவரது அமைச்சரவையில் இருந்த அனைத்து அமைச்சர்களும்  ராஜினாமா செய்தனர். அனைத்துக் கட்சி ஆட்சிமுறைக்கு அழைப்பு விடுத்தும் எதிர்க்கட்சிகள் அதனை ஏற்கவில்லை. பின்னர் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது.  பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று, பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  ஏற்கனவே அதிபர் கோத்தபய பதவி விலக மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சே , அதிபர் கோத்தபய ராஜபக்சே

அதேபோல் மகிந்த ராஜபக்சேவும், அரசின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.  பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்றும் கூறினார்.  இந்நிலையில் தற்போது மகிந்த ராஜபக்‌சேவை பிரதமர் பதவியில் இருந்து விலக்க அதிபர் கோத்தபய ராஜபக்‌சே ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அதிபரை நியமிக்க உள்ளதாகவும்,  சமீபத்தில் அமைத்த புதிய அமைச்சரவைக்கு உதவுவதற்காக தேசிய சபை ஒன்றையும் நியமிக்க உத்தரவிட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.