மலேசிய பிரதமருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

 
மலேசிய பிரதமருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் சந்தித்து பேசினார்.

Image


அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம், உலகளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அடுத்தாக ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். அதன்பின் அவரது 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கடந்த மாதம் இமயமலை சென்ற நடிகர் ரஜினிகாந்த், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தற்போது மலேஷியா சென்றுள்ள ரஜினிகாந்த், இன்று அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்து உரையாற்றினார். 

Image
இதுதொடர்பான புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அன்வர் இப்ராஹிம், “ஆசிய மற்றும் சர்வதேச கலை உலகில் புகழ்பெற்ற ரஜினியை சந்தித்தேன். களத்திலும் திரையுலகிலும் ரஜினிகாந்த் தொடர்ந்து சிறந்து விளங்க பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.