இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் கைது!
Jan 25, 2025, 12:44 IST1737789265119

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்சேவை குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இலங்கை நாட்டின் முன்னாள் அதிபராக இருந்தவர் மகிந்த ராஜபக்சே. இவரது மகன் யோஷிதா ராஜபக்சே மீது நிலப்பிரச்சனை தொடர்பாக புகார் எழுந்தது. இந்த நிலையில், ராஜபக்சேவை குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இலங்கையின் பெலியத்த பகுதியில் வைத்து யோஷிதா ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார். நிலப் பிரச்சினை தொடர்பான குற்றச்சாட்டில் ராஜபக்சேவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை முன்னாள் அதிபரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.