எப்படியெல்லாம் மரணம் வருது? பரிதாபமாக உயிரிழந்த பெண்! அதிர வைக்கும் காணொலி

 
s

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்ற 24 வயதான ரேச்சல் அபா, இலக்கை அடைய இன்னும் 2 மைல் தூரமே இருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Rachel Apa running in the marathon.

மாரத்தான் செயலி மூலம் மகளின் ஓட்டத்தைக் கண்காணித்து வந்த அவரது பெற்றோர், 24-வது மைல் பகுதியில் அவர் நகராமல் இருப்பதைக் கவனித்துள்ளனர். 23-வது மைலில் இருந்தபோது, அவரது தந்தை 'இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டாய்' எனக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். ஆனால், அவரிடமிருந்து பதில் வரவில்லை. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ரேச்சல் அபாவைக் காப்பாற்ற மருத்துவர்கள் 6 மணி நேரம் போராடியும் பலனின்றி அவர் உயிரிழந்தார். அதிக உடல் உழைப்பால் ஏற்படக்கூடிய தசைச் சிதைவு பாதிப்பே அவரது உயிரிழப்புக்குக் காரணம் என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.