குரங்கம்மை பரவல் அதிகரிப்பு - அமெரிக்காவில் சுகாதார அவசர நிலை பிரகடனம்

 
monkeypox

அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரிப்பால் சுகாதார அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது குரங்கம்மை நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் குரங்கம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவையும் அந்த நோய் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் 9 பேர் இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரிப்பால் சுகாதார அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காமல் பரவௌம் குரங்கம்மை நோயை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் நியூயார்க், இல்லினாய்ஸ், கலிபோர்னியா உட்பட பல மாகாணங்களில் சுகாதார அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய் பரவலைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும் சுகாதார அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.