மொரோக்கோ சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 151 பேர் உயிரிழப்பு
Sep 9, 2023, 08:01 IST1694226660742

மொரோக்கோவில் இன்று அதிகாலை 3.14 மணிக்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 151 பேர் உயிரிழந்தனர்.
துருக்கி மொராக்கோ நாட்டில் இன்று அதிகாலை 3:14 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் அங்கிருந்த வீடுகளின் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.
இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 151 பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மராகேச் என்ற பகுதியில் இருந்து 72 கிலோமீட்டர் தூரத்தை மையமாகக் கொண்டு 6.8 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் துருக்கியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.