எவரெஸ்ட் மசாலா பொருட்களில் பூச்சிக்கொல்லி - சிங்கப்பூரை தொடர்ந்து ஹாங்காங்கிலும் தடை

 
tn

எம் டி ஹெச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய இந்திய நிறுவனங்களின் சிக்கன், மட்டன், மீன், சாம்பார் உள்ளிட்ட பல்வேறு மசாலா பொடிகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

 இந்த சூழலில் எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன்  மசாலாவில் அதிகளவு எத்திலின் ஆக்சைடு கலந்திருப்பதாக கூறிய சிங்கப்பூர் அரசு அந்த மசாலா பொருட்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது.  இந்த நிலையில் எம் டி ஹெச் பிரைவேட் லிமிடெட் மற்றும் எவரெஸ்ட் ஃபுட் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் மசாலா பொருட்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.

1

 ஹாங்காங்கின் உணவு பாதுகாப்பு மையம் வழங்கிய ஆய்வின் படி மசாலா பொருட்களின் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட எத்திலியின் ஆக்சைடு ரசாயனம் அதிகமாக உள்ளதால் மெட்ராஸ் கறி பவுடர் , சாம்பார் மசாலா பவுடர் , கர்ரி  பவுடர் ஆகிய மூன்று மசாலா பொருட்களில்  அதிக அளவு ரசாயனம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது தெரியவந்துள்ளது.  இதன் காரணமாக இந்த மசாலா பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.