#BREAKING 240 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் மாயம்
ஜாவா கடற்பகுதியில் 240 பேருடன் சென்ற இந்தோனேசியப் பயணிகள் கப்பல் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவிலிருந்து போர்னியோ தீவுக்கு சென்றபோது பயணிகள் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதையடுத்து, தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. கிழக்கு ஜாவாவின் சுரபயாவிலிருந்து புறப்பட்ட விர்கோ டிரான்ஸ்போர்ட் 8 என்ற கப்பல், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தனது கப்பல் நிறுவனத்துடனான தொடர்பை இழந்தது. இக்கப்பல் 243 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்றது. 2.5 மீட்டர் (8.2 அடி) உயரம் வரையிலான அலைகளை எதிர்த்துப் போராடி மீட்புப் படையினர் படகை அடைந்ததாகவும், படகில் இருந்த ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. கப்பலில் இருந்து 103 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
கப்பலின் கடைசி இருப்பிடம், அது செல்ல வேண்டிய இடத்திலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் (90 மைல்கள்) தொலைவில் ஜாவா கடலில் கண்டறியப்பட்டது. தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு, கப்பல் 'சாய்ந்துகொண்டிருந்தது' என அதன் கேப்டன் கூறியுள்ளார்.

