#BREAKING 68 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து - பயணிகளின் கதி என்ன?
Sun, 15 Jan 20231673763338689

நேபாளில் 68 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற விமானம் ஓடுதளத்தில் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேபாள நாட்டின் பொக்காரோ விமான நிலையத்தில் இருந்து 68 பயணிகளுடன் யேட்டி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்நிலையில் விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமான ஓடுதளத்திலேயே விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 28 பயணிகள் பயணம் செய்த நிலையில் அவர்களின் கதி என்ன ஆனது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதனிடையே விபத்துக்குள்ளான பொக்காரோ விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 68 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நேபாள நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.