ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து – பக்க விளைவுகளை ஏற்படுத்த வில்லை

 

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து – பக்க விளைவுகளை ஏற்படுத்த வில்லை

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 48 லட்சத்து  88 ஆயிரத்து 299 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 19 நாட்களுக்குள் 48 லட்சம் அதிகரித்து விட்டது.  

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 72 லட்சத்து 76 ஆயிரத்து 321 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 40 ஆயிரத்து 431 பேர்.

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து – பக்க விளைவுகளை ஏற்படுத்த வில்லை

வல்லரசு நாடுகளே கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றன. கொரோனா தடுப்பு மருந்து மட்டுமே தீர்வு எனும் நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது நிலைமை.

சீனாவில் உலகின் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு விட்டது. அது தவிர, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் கொரோனா தடுப்பு மருந்தான Covishield புனேயின் கிளினிக்கல் பரிசோதனை செய்யப்படுகிறது.

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து – பக்க விளைவுகளை ஏற்படுத்த வில்லை

இந்தியாவைச் சேர்ந்த 32 மற்றும் 48 வயது கொண்ட இரு தன்னார்வலர்களுக்கு, புனேவில் உள்ள பார்தி வித்யபெத்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், கடந்த புதன் கிழமை Covishield தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

நேற்று அவர்களைப் பரிசோதித்த மருத்துவக் குழு, ‘அவர்களோடு எப்போதும் தொடர்பில் எங்கள் மருத்துவக் குழு இருக்கிறது. இரு தன்னார்வலர்களும் நன்றாக இருக்கிறார்கள். அவர்கள் எவ்வித வலியோ, காய்ச்சலோ, பக்கவிளைவுகளுக்கான அறிகுறிகளோ தென்பட வில்லை’ என்று தெரிவித்திருக்கிறது.

ஒரு மாத இடைவெளியில் அந்த இருவருக்கும் மீண்டும் இந்தத் தடுப்பூசி போடப்படுமாம். இதன் இரண்டாம் கட்டப் பரிசோதனையில் இந்தியாவின் 1500 தன்னார்வலர்களுக்கு இந்த மருந்து செலுத்த திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.