#BREAKING உடல் எடையை குறைக்கும் மருந்தால் 200 பேர் பலி – அதிர்ச்சி தகவல்

 
Over 200 deaths suspected of being linked to weight-loss drugs like Ozempic & Mounjaro in UK

பிரிட்டனில் உடல் எடையை குறைக்க பயன்படுத்திய ஊசி மருந்துகளால் 200 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1.5 லட்சம் பேர் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Nearly 200 deaths linked to weight-loss drugs Ozempic and Mounjaro in the UK  - The Times of India

உலகளவில் உடல் எடையை விரைவாகக் குறைக்க Ozempic, Mounjaro உள்ளிட்ட ஊசி மருந்துகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஊசிகளைப் பயன்படுத்தியவர்களில் செரிமானக் கோளாறுகள், கடுமையான வயிற்றுப் பிரச்னைகள், நரம்பு மண்டல பாதிப்புகள், இதய நோய்கள் மற்றும் தீவிர மனநல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.5 லட்சம் பேர் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Mounjaro என்ற பெயரில் விற்கப்படும் டிர்செபடைடு தொடர்பாக, இரைப்பை குடல் பிரச்சனைகள் உட்பட 106,189 பாதகமான எதிர்விளைவுகளும், 120 மரணங்களும் பதிவாகியுள்ளன. Ozempic உடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சுமார் 48,089 பாதிப்புகளும், 59 மரணங்களும் பதிவாகியுள்ளன.  உடல் எடை குறைப்பு மருந்தில் வெகோவி (Wegovy)  என்ற முக்கிய மூலப்பொருள் உள்ளது. இதேபோல் சாக்ஸெண்டா என்ற வர்த்தகப் பெயரில் விற்கப்படும் லிராக்ளூடைடுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 4,491 பாதகமான விளைவுகளும், 37 இறப்புகளும் பதிவாகியுள்ளன.