#BREAKING குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலி!

 
ச்

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதால், மறு அறிவிப்பு வரும் வரை சேவைகள் நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத் நோக்கி வந்த வருகை விமானங்கள் அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல்-ராஜ்ஹி தெரிவித்துள்ளார். கெஷம் தீவில் அமெரிக்கா அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக குவைத், பக்ரைன் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

குவைத்தை நோக்கி மீண்டும் தாக்க வந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் உச்சக்கட்ட பதற்றம் உருவாகியுள்ளது. தாக்குதல் நடத்தியது ஈரானாக இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், நடுவானிலேயே ஏவுகணைகள் தாக்கி அழிக்கப்பட்டன. பஹ்ரைனிலும் இதே போன்ற தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஈரானின் கெஷ்ம் தீவுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது