“2050ஆம் ஆண்டு உலகில் நான்கில் ஒருவருக்கு காது கேட்காது” – உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி ரிப்போர்ட்

“2050ஆம் ஆண்டு உலகில் நான்கில் ஒருவருக்கு காது கேட்காது” – உலக சுகாதார அமைப்பு  அதிர்ச்சி ரிப்போர்ட்

2050ஆம் ஆண்டுக்குள் உலகில் நான்கில் ஒருவருக்கு காது கேளாமை குறைபாடு ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. காது நோய் பற்றிய புரிதல், அதைத் தடுக்கும் முறைகளைத் தவிர்க்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் எதிர்காலத்தில் இப்பிரச்சினையைத் தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேற்கண்ட தகவல்கள் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“2050ஆம் ஆண்டு உலகில் நான்கில் ஒருவருக்கு காது கேட்காது” – உலக சுகாதார அமைப்பு  அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகிலேயே காது குறைபாட்டை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வறிக்கையாக இது பார்க்கப்படுகிறது. அறிக்கையில் எதன் காரணமாக இக்குறைபாடு ஏற்படும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிறைய காரணங்கள் கூறப்பட்டாலும் தொற்று நோய்கள், பிறப்பு குறைபாடுகள், வாழ்க்கை முறை தேர்வு, அதிகப்படியான இரைச்சல் ஆகியவை பிரதானமாக உள்ளன. உலகளாவிய இப்பிரச்சினையை முறையாகக் கையாளவில்லை என்றால் ஆண்டுதோறும் ஒவ்வொருவருக்கும் தலா 100 ரூபாய் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டு, நாட்டில் பல லட்சம் கோடி நிதி வீணாய் போகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

“2050ஆம் ஆண்டு உலகில் நான்கில் ஒருவருக்கு காது கேட்காது” – உலக சுகாதார அமைப்பு  அதிர்ச்சி ரிப்போர்ட்

தற்போதைய நிலவரப்படி ஐந்தில் ஒருவருக்கு இந்தக் குறைபாடு இருக்கிறது. இந்த எண்ணிக்கை அடுத்த 30 வருடத்திற்குப் பின் 1.5 மடங்கு அதிகரிக்கும். 2019ஆம் ஆண்டு 160 கோடி மக்களுக்கு இருந்த இக்குறைபாடு 2050ஆம் ஆண்டில் 250 கோடியாக உயரும். அதில் 70 கோடி பேருக்கு பாதிப்பு தீவிரத்தன்மையோடு இருக்கும். தற்போது இந்த எண்ணிக்கை 43 கோடியாக இருக்கிறது. மக்கள்தொகை அதிகரித்தால் மேற்கண்ட எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

“2050ஆம் ஆண்டு உலகில் நான்கில் ஒருவருக்கு காது கேட்காது” – உலக சுகாதார அமைப்பு  அதிர்ச்சி ரிப்போர்ட்

இதில் பெரிதும் பாதிக்கப்படுவது குறைந்த வருமானம் கொண்ட ஏழை நாடுகள் தான். முறையான மருத்துவக் கட்டமைப்புள்ள பணக்கார நாடுகளிலேயே காது குறைபாடுகளுக்குச் சரியான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என குற்றஞ்சாட்டும் WHO, ஏழை நாடுகளில் 80 சதவீத மக்கள் காது கேளாமை குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறது. காது சம்பந்தமான குறைபாடுகள் குறித்த விழிப்புணர்வு உலக நாடுகளிடையே இல்லை என்பதை இந்த ஆய்வறிக்கை காட்டுகிறது.

“2050ஆம் ஆண்டு உலகில் நான்கில் ஒருவருக்கு காது கேட்காது” – உலக சுகாதார அமைப்பு  அதிர்ச்சி ரிப்போர்ட்

ஆதலால் சுகாதாரத் துறையினர் தானும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல ஒலி இரைச்சலைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் உடல்நலத்தை அரசு காக்கத் தவறினால், அதற்கு நாடுகள் அளிக்கும் விலை உயர்ந்ததாக இருக்கும். தகவல் தொடர்பு, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் விலக்கப்படுவதால் ஏற்படும் நிதி இழப்புகளும் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்திருக்கிறது.