ஜோ பைடனே அமெரிக்க அதிபர் அதிகாரபூர்வ அறிவிப்பு – ட்ரம்பின் தந்திரங்கள் தோல்வி!

ஜோ பைடனே அமெரிக்க அதிபர் அதிகாரபூர்வ அறிவிப்பு – ட்ரம்பின் தந்திரங்கள் தோல்வி!

நவம்பர் மாத தேர்தலில் தொடங்கிய பிரச்சனைதான் அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது.

அமெரிக்க அதிபராக எலெக்ட்ரால் காலேஜ் வாக்குகள் 270 எடுக்க வேண்டும். ஜோ பைடன் 306 வாக்குகள் பெற்றுவிட்டார். இதனால், ஜோ பைடன் அதிபராவது உறுதியாகியுள்ளது. ஆனாலும், பல மாநிலங்களில் ஜோ பைடன் வென்றதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார் தற்போதைய அதிபர் ட்ரம்ப். ஆனபோதும், பல இடங்களிலிருந்தும் ட்ரம்ப்க்கு எதிராகவே தீர்ப்புகள் வந்தன. பல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஜோ பைடனே அமெரிக்க அதிபர் அதிகாரபூர்வ அறிவிப்பு – ட்ரம்பின் தந்திரங்கள் தோல்வி!

ஜோ பைடன் சட்டப்படி இம்மாத இறுதியில் அதிபராகப் பதவி ஏற்க வேண்டும். அதற்காக அமெரிக்க தேர்தல் சபை உறுப்பினர்கள் நேற்று கூடி வாக்களித்து அதிபரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். அதற்கான வாக்கெடுப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் கேப்பிடல் கட்டிடத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

ஆயுதங்களோடு வந்த ட்ரம்ப் ஆதரவாளர்களைப் பார்த்த செனட் உறுப்பினர்கள் அச்சத்தோடு தப்பி ஓடினார்கள். இந்த வாக்கெடுப்பை முன்னெடுக்கும் அவைத் தலைவர் அறையிலும் ட்ரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து பொருட்களை உடைப்பதும், அவை தலைவர் நாற்காலியில் உட்காந்துகொள்வதுமாக செய்தனர்.

ஜோ பைடனே அமெரிக்க அதிபர் அதிகாரபூர்வ அறிவிப்பு – ட்ரம்பின் தந்திரங்கள் தோல்வி!

நாடாளுமன்ற உறுப்பினர்களை பத்திரமாக அனுப்பி வைத்த காவல் துறை இரவே மீண்டும் அழைத்து வந்து வாக்கெடுப்பை நடத்தியது. இதில் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவின் அடுத்த அதிபர் என்பது உறுதியானது. இதன்மூலம் எண்ணற்ற குறுக்கு வழிகளால் ஜோ பைடன் அதிபராவதைத் தடுக்க நினைத்த ட்ரம்பின் தந்திரங்கள் தோல்வியைத் தழுவின.

ஜோ பைடனே அமெரிக்க அதிபர் அதிகாரபூர்வ அறிவிப்பு – ட்ரம்பின் தந்திரங்கள் தோல்வி!

ஜோ பைடன் இன்னும் 13 நாட்களில் அதாவது ஜனவரி 20- தேதி முறைப்படி அமெரிக்காவின் அதிபராகப் பதவி ஏற்றுக்கொள்வார். துணை அதிபராக கமலா ஹாரீஸ் பொறுப்பேற்றுக்கொள்வார். இனியாவது ட்ரம்ப் தனது தந்திரங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதே பல நாட்டுத் தலைவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இல்லையெனில், அமெரிக்காவின் ஜனநாயகம் எனும் ஒன்றே இருக்காது என்ற நிலை வந்துவிடும்.