AI-ஆல் விபரீதம்... 2100க்குள் மனித இனம் அழியும் அபாயம்

 
s

2100-க்குள் மனித இனம் அழியும் அபாயம் உள்ளதாக 'தி லான்செட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.


அணு ஆயுதப் போர், AI தவறான பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக 2100-க்குள் மனித இனம் அழியும் அபாயம் என்று 'தி லான்செட்' (LANCET) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 75 ஆண்டுகளில் உலக மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய காலநிலை மாற்றம், காற்று மாசுபாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிட்ட 17 முக்கிய அச்சுறுத்தல்களை 25 இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளாக மாறுவதற்கு முன்பே அரசுகள் அவற்றைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அழிவை தடுக்க முடியும் எனவும் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அணு ஆயுத மோதலின் போது சூரிய ஒளியைத் தடுத்து பஞ்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மேல் வளிமண்டலத்தில் போதுமான துகள்களைச் செலுத்துவதன் மூலமாகவோ அல்லது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உயிரியல் ஆயுதங்கள் மூலமாகவோ அவை மனிதகுலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.