இந்த முறையும் கிடைக்கவில்லை! டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு மீண்டும் ஏமாற்றம்

 
trump

2026-ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற நோபல் அமைதிப் பரிசை (Nobel Peace Prize), தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞரும் சர்வதேச நீதிபதியுமான நவனீதம் "நபி" பிள்ளை (Navanethem "Navi" Pillay) வென்றுள்ளார் என நார்வே நோபல் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு நவி பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த பரிசைப் பெற விரும்பிய டிரம்புக்கு இந்த முறையும் விருது கிடைக்கவில்லை. நோபல் பரிசை டிரம்புக்கு வழங்க வேண்டும் என நார்வே நோபல் குழுவுக்கு அவர் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. கடந்த ஆண்டு நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோ, தனது பரிசை டிரம்புக்கு அடையாளபூர்வமாக வழங்கியிருந்தார். டிரம்புக்கு பரிசு வழங்காத நோபல் குழுவை வெள்ளை மாளிகை விமர்சித்தது. தெற்காசிய அமைதியை முன்னேற்றியதாகக் கூறி டிரம்பை மீண்டும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் பரிந்துரைத்தது குறிப்பிடதக்கது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், “அவர்களின் முடிவு என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.
என்னைப் போன்றவர்களுக்கு அந்த விருதை வழங்க மாட்டார்கள் என்ற ஒரு பெயர் அவர்களுக்கு வரட்டும். இது அதற்கான நேரம்தான்” என்றார்.