அடுத்த அதிர்ச்சி! சீனாவில் வீரியமிக்க புதுவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

 
china

சீனாவில் வீரயமிக்க புதுவகை கொரோனா வைரஸ் பரவி வருவது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா பரவல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. உலக நாடுகள் முழுவதும் இந்த வைரஸ் தொற்றால் பெரும் பாதிப்பை சந்தித்தன. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், பிரான்ஸ், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்தன. தொற்று பரவலின் போது சற்று தடுமாறிய சீனா, அதன் பின்னர் தொற்று பரவலை கட்டுப்படுத்தியது. கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்ற உண்மையை சீனா தொடர்ந்து மறைத்து வரும் நிலையில், இதன் காரணமாக சீனா தான் கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பியதாக அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

இந்நிலையில், சீனாவில் வீரயமிக்க புதுவகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய கொரோனா அலை, ஜூன் மாத இறுதியில் உச்சத்தை எட்டக்கூடும் என்றும், இந்த வகை தொற்றால் சீனாவில் வாரத்திற்கு சுமார் 6 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓமிக்ரான் வைரசின் புதிய மாறுபாட்டால், சீனாவில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், புதிய வகை கொரோனா அந்நாட்டு மக்களை பீதியடைய செய்துள்ளது.