மியான்மர் நிலநடுக்கம்- 55 பேர் உயிரிழப்பு

மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 55 பேர் உயிரிழந்தனர்.
மியான்மரில் இன்று காலை 11.50 மணிக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 7.2 ஆக பதிவானது. மீண்டும் 12 நிமிட இடைவெளியில் அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 6.4 ஆக பதிவானது. இதனால் மக்கள் மிகுந்த பீதி அடைந்ததோடு, வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர். மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 55 பேர் உயிரிழந்தனர். இதுவரை 200 பேர் காயம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு வானுயர கட்டிடங்கள் நொடிப் பொழுதில் தரைமட்டமானதால் இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதேபோல் தாய்லாந்தின் பாங்காக்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானது. பாங்காங்கில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று நிலநடுக்கத்தால் தரைமட்டமானது. நிலநடுக்கத்தில் சிக்கி தாய்லாந்தில் 4 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயம், 81 பேரை காணவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். தாய்லாந்து அரசுடன் ஒருங்கிணைந்து நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், நிலநடுக்கத்தால் இதுவரை எந்த இந்தியர்களுக்கும் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் பதிவாகவில்லை, அவசரநிலை ஏற்பட்டால் தாய்லாந்தில் உள்ள இந்தியர்கள் +66 618819218 என்ற அவசர எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என நிலநடுக்கம் தொடர்பாக இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.