#Food Challenge 70 அவித்த முட்டைகளை சாப்பிட்ட இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சர் உயிரிழப்பு

 
x

இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் ஃபாலோவர்ஸ்க்கு மேல் வைத்திருந்த பிரபல MUKBANG INFLUENCER யிங்யிங் (24) மாரடைப்பின் காரணமாக காலமானார்.

Mukbang star, 24, dies just days after revealing dangerously low potassium  levels linked to extreme eating

சென் ஸியி என்ற இயற்பெயர் கொண்ட யிங்யிங், ஆகஸ்ட் 17 அன்று காலமானார். அவரது பெற்றோர் மரணத்திற்கான உடனடிக் காரணத்தை வெளியிடவில்லை. அவர் கடைசியாக வெளியிட்ட வீடியோவில் ஒரே நேரத்தில் 60-லிருந்து 70 அவித்த முட்டைகளை சாப்பிட்டதே மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தகவல்தெரிவித்துள்ளனர். ‘பணம் முக்கியம்தான் ஆனால் அதைவிட ஆரோக்கியம் முக்கியம்’ என அவர் இறுதியாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்புக்கு மூன்று நாட்களுக்கு முன்புதான், யிங்யிங்  தனது கையின் பின்புறத்தில் இருந்த ஊசித் தழும்புகளையும், தனது இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு ஒரு லிட்டருக்கு 2.3–2.5 மில்லிமோல்களாகக் குறைந்து, இயல்பான குறைந்தபட்ச அளவான 3.5-ஐ விடக் கணிசமாகக் குறைந்துவிட்டதாகக் காட்டும் பரிசோதனை முடிவுகளையும் பதிவிட்டிருந்தார். படப்பிடிப்பில் செலவழித்த நீண்ட இரவுகளும், அதிக அளவு உணவை உட்கொண்ட பிறகு மீண்டும் மீண்டும் வாந்தியை வரவழைத்ததும் தன்னை உடல் ரீதியாக மிகவும் சோர்வடையச் செய்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். நேரலையின்போது, மற்றவர்களை ஈர்ப்பதற்காக அசாதாரணமான அளவு உணவை உட்கொள்ள வேண்டியிருந்தது என்றும் அவர் வருத்தமுடன் கூறியிருந்தார். அடுத்த சில நாட்களிலேயே யிய்யிங் உயிரிழந்தார்.