மொரோக்கோ நிலநடுக்கம் - உயிரிழந்தோரின் எண்ணிக்கை 296 ஆக உயர்வு

 
tn

மொரோக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 296 ஆக உயர்ந்துள்ளது.

tn

துருக்கி மொராக்கோ நாட்டில் இன்று அதிகாலை 3:14 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் அங்கிருந்த வீடுகளின்  கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.   இந்த இடிபாடுகளில் சிக்கி இன்று காலை வரை 151 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மராகேச் என்ற பகுதியில் இருந்து 72 கிலோமீட்டர் தூரத்தை மையமாகக் கொண்டு 6.8 என்ற  அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

rg

இந்நிலையில்  மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 296 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக இநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொராக்கோவிற்கு உதவ இந்தியா தயாராக உள்ளது என்றும் இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்றும்  பிரதமர் மோடி கூறியுள்ளார்.