‘பிறப்புறுப்பு திருட்டு’- சமூக ஊடக வதந்தியால் 80-க்கும் மேற்பட்டோர் கொலை

 
s

சமூக ஊடக வதந்தியால் 80-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘பிறப்புறுப்பு திருட்டு' என்ற பொய்யான குற்றச்சாட்டால் ஆப்பிரிக்க நாடுகளில் வன்முறை ஏற்பட்டது. கடந்த ஒராண்டுக்கும் மேலாக சமூக ஊடகங்களில் பரவும் இந்த வதந்தியால் குறைந்தது 8 ஆப்பிரிக்க நாடுகளில் வன்முறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு ஜூலை வரை 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக BBC தெரிவித்துள்ளது.

மொசாம்பிக் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 6 வாரங்களில் மட்டும் 55 பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் அரசு ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரியும் அடங்குவர். பொய்யான சமூக ஊடகத் தகவல், கூட்ட வன்முறையாக மாறிய அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறியுள்ளது.