மியான்மர் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 3,643ஆக உயர்வு!

 
Miyanmar

மியான்மரில் நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,643ஆக உயர்ந்துள்ள நிலையில், 700க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்

மியான்மரில் மார்ச் 28 ஆம் தேதி 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்பட்டுள்ளனர். இந்த பேரிடருக்கு  மியான்மரின் இராணுவ ஆட்சிக்குழு ஒரு வார தேசிய துக்கத்தை அறிவித்துள்ளது. இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருப்பவர்களை மீட்க மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.  இந்த பயங்கர நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,643ஆக உயர்ந்துள்ள நிலையில், 700க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். 4,575 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  இடிபாடுகளில் 5வது நாளாக மீட்பு பணிகள் தொடர்கின்றன.
 
இதேபோல் மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தாய்லாந்திலும் இறப்பு எண்ணிக்கை  தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாங்காக்கில், இடிந்து விழுந்த கட்டுமானத்தில் இருந்த ஒரு வானளாவிய கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் புதைந்திருப்பதாக நம்பப்படும் 76 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.