2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவது ஆபத்து- எச்சரிக்கும் நிபுணர்கள்

 

2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவது ஆபத்து- எச்சரிக்கும் நிபுணர்கள்

2 வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசங்களை அணிவது சுவாச பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து டோக்கியோ உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதாகவும், அவசர நிலை விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசங்களை அணிவது சுவாசத்தை கடினமாக்கி மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடும் என ஜப்பானிய மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவது ஆபத்து- எச்சரிக்கும் நிபுணர்கள்

குழந்தைகளுக்கு துணியிலான முகக்கவசங்களை அணியக்கூடாது என அமெரிக்க நோய்களுக்கான கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் கருத்துக்களை சுட்டிக்காட்டியுள்ள, ஜப்பான் குழந்தை சங்கம் குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.