பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ்-க்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிப்பு
Feb 6, 2024, 08:45 IST1707189321804
பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ்-க்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு உள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ்-க்கு புற்றுநோய் இருப்பது உறுதியானதால், நேற்று முதல் அவருக்கு புற்று நோய்க்கான சிகிச்சை தொடங்கப்பட்டு இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது. புரோஸ்டேட் (prostate) சிகிச்சைக்கு சென்றபோது பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் prostate வகை புற்றுநோய் பாதிப்பு இல்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுறைப்படி சிகிச்சைக்காக பொதுப்பணிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 75 வயதான மன்னர் சார்லஸ் கடந்த 2023ஆம் ஆண்டு மன்னராக முடிசூடினார் என்பது குறிப்பிடத்தக்கது.