ஐநா அதிரடி! கைலாசாவின் கோரிக்கை நிராகரிப்பு! விஜயபிரியா நித்தியானந்தா பேச்சு புறக்கணிப்பு

 
n

கைலாசா பிரதிநிதிகள் பேசிய பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐநா சபை அதிரடியாக கருத்தை வெளியிட்டு இருக்கிறது.  

 திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்து கர்நாடக மாநிலத்தில் பிடதியில் ஆசிரமம் அமைத்து புகழ்பெற்ற நித்தியானந்தா தற்போது வெளிநாட்டில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி வருகிறார்.   இந்த நாட்டுக்கு உலக அங்கீகாரம் தேடி வருகின்றார்.  

இந்த நிலையில்,  கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி ஜெனிவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான 19-வது மாநாட்டின் 73 வது கூட்டம் நடந்தது.   இந்த கூட்டத்தில் கைலாசா நாட்டின் அமெரிக்காவின் பிரதிநிதியாக விஜயபிரியா நித்தியானந்தா பங்கேற்றார்.   அவர் அந்த கூட்டத்தில் பேசும் போது,   நித்தியானந்தா தாய் நாட்டால் வேட்டையாடப்பட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டினார். 

ni

இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.   இதை அடுத்து ஐக்கிய நாடுகள் சபையில் தனது அறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும்,   கருத்து  திரிக்கப்பட்டு உள்ளது.  இந்து எதிர்ப்பு பிரிவுகளால் சிதைக்கப்படுகிறது என்று விஜயபிரியா நித்தியானந்தா கூறி இருந்தார்.  

 நித்தியானந்தா தனது தாய்நாட்டில் சில இந்து எதிர்ப்பு அமைப்புகளால் துன்புறுத்தப்படுகிறார் என்று தான் நான் கூறினேன் என தெளிவுபடுத்த விரும்புகிறேன். அமெரிக்கா கைலாசா,  இந்தியாவுக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறது.  இந்தியாவை அதன் குரு பீடமாக மதிக்கிறது.  எங்கள் கவலை எல்லாம் இந்து எதிர்ப்பு ஒரு விஷயத்தை நோக்கி மட்டுமே வழிநடத்தப்படுகிறது.  

 இந்து மதம் மற்றும் கைலாசாவின் மிகச்சிறந்த தலைவருக்கு எதிராக வன்முறையை தூண்டும் அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம் என்று கூறியிருந்தார்.

 இதை அடுத்து ஐநா சபை நித்தியானந்தாவின் பிரதிநிதிகள் ஐநா சபை கூட்டத்தில் பேசிய கருத்துக்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றது என்று அறிவித்துள்ளது. பிப்ரவரி மாதம் நடந்த ஐநா சபை கூட்டத்தில் கைலாசாவிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  இவர்கள் கூட்டத்திற்கு தொடர்பில் இல்லாத கருத்துக்களை தெரிவித்தார்கள்.   அதனால் இவர்கள் பேசிய கருத்துக்களை ஐநா சபை முற்றிலுமாக புறக்கணிக்கிறது .  ஐநாவுக்கான கைலாசத்தின் நிரந்தர தூதர் எனக் கூறிய விஜய பிரியா நித்தியானந்தா சொன்ன கருத்துக்கள் கூட கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.