கைலாசா இ. குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் -நித்தியானந்தா அறிவிப்பு

உலகம் எங்கிலும் உள்ள இந்துக்களை தங்கள் நாட்டின் குடியுரிமை பெற அழைப்பு விடுத்திருக்கிறார் நித்யானந்தா. நித்யானந்தாவால் நிறுவப்பட்ட கைலாசா ஐக்கிய மாகாணங்கள் இ-குடியுரிமைக்கான விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன கைலாசா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த நித்தியானந்தா கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் அமைத்து புகழ்பெற்றார். அவர் தற்போது ஈக்வடார் அருகே ஒரு சிறிய தீவில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருக்கிறார் என்று அவரே அறிவித்துள்ளார். அதற்கு , ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஷ்’ என்று பெயரிட்டுள்ளார். இதையடுத்து கைலாசா நாட்டின் குடியுரிமைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இ-குடியுரிமை பெற தேவையான விவரங்கள் கைலாசா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கைலாசாவை அதிகாரப்பூர்வமாக தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் வேண்டுகோள் விடுத்திருந்தார் நித்தியானந்தா. இதை அடுத்து அதற்கான தேவையான அனைத்து வேலைகளும் முடிந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் நித்தியானந்தா மேற்கண்ட முயற்சிகள் பலனளித்துள்ளன . ஜெனிவா கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் குழுவால் சுவிச்சந்திரன் ஜெனிவாவில் சமீபத்தில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் கைலாசா ஐநா பிரதிநிதி முன்னுரிமை பெற்றுள்ளார். இந்த கூட்டத்தில் கைலாசா சார்பில் விஜயபிரியா நித்தியானந்தா கலந்து கொண்டிருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர தூதராக விஜயபிரியா நித்தியானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், உலகம் எங்கிலும் உள்ள இந்துக்களுக்கு என்று உருவாகி இருக்கும் நாடு கைலாசா. ஆதலால் உலகம் எங்கிலும் உள்ள இந்துக்கள் கைலாசாவின் குடியுரிமை பெற வேண்டும். அதனால் அவர்கள் இ குடியுரிமை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று இ குடியுரிமை பெறுவதற்காக https://kailaasa.org/e-citizen/என்ற சிறப்பு இணையதளமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
https://kailaasa.org/e-citizen/என்றஇந்த இணைப்பைக் கிளிக் செய்து விவரங்களைப் பூர்த்தி செய்தால் கைலாசா நாட்டின் இ-குடியுரிமையைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Apply Now for E-Citizenship of United States of KAILASAhttps://t.co/zPWSIaOVxl#Kailasa #USK #Citizen pic.twitter.com/F9YNxZZgYd
— KAILASA's SPH Nithyananda (@SriNithyananda) March 1, 2023