இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல்..! சக்திவாய்ந்த பதில் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை..!

 
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல்..!  சக்திவாய்ந்த பதில் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை..! 


 இஸ்ரேல் மீது 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.  

 பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தலைமையிடமாக கொண்டு ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் நாட்டின் மீது    கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி மிகப்பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடுமையான போர் மூண்டது.  பின்னர் காசா மீது கடுமையான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வந்தது.   இப்போரில் பாலஸ்தீனத் தரப்புக்கு பெரும் பாதிப்புகள்  ஏற்பட்டு உள்ளன. பாலஸ்தீனத் தரப்பில் மட்டும் அப்பாவி பொதுமக்கள் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ள நிலையில், 1 லட்சம் பேர் வரை காயமடைந்துள்ளனர். இதேபோல் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர்.  

ஹமாஸ் அமைப்புக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும்,  லெபனானின் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் , ஈரானும் ஆதரவு தெரிவித்து வந்தன.  இந்த நிலையில், கடந்த ஜூலை 31ம் தேதி ஈரானில் புதிய அதிபர்  பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக,  சென்றிருந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார்.  தொடர்ந்து கடந்த 28ம் தேதி இஸ்ரேஸ் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவரான நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார்.  

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல்..!  சக்திவாய்ந்த பதில் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை..! 

இந்நிலையில் இதற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று இரவு இஸ்ரேஸ் மீது ஈரான் ஏவுகனை தாக்குதல் நடத்தியுள்ளது. லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பு தலைவர் மற்றும் ஈரான் கமாண்டர் கொலைக்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேஸ் மீது அடுத்தடுத்து 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.  இஸ்ரேலின் 3 ராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்திருக்கிறது.  

உடனடியாக  சுதாரித்துக்கொண்ட  இஸ்ரேல்  வான்பாதுகாப்பு அமைப்பு, ஈரானின் ராக்கெட்டுகளை நடுவானில் சுட்டு வீழ்த்தின.  இந்த ஏவுகணைகளின் பாகங்கள் விழுந்து 2 பேர் காயமடைந்துள்ளனர்.  இந்நிலையில் ”ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது; அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும்” என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார். ஈரானின் மத்திய கிழக்கில் இன்று இரவு சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.  

இதனையொட்டி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.  போர் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் ஐ.நா தலைவர் அண்டானியோ குட்ரோஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். உடனடி போர் நிறுத்தம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.  
 

null