மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை முதல் தாய்!

 
s

நிகழாண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை, போர்ட்டோ ரிகோ நாட்டை சேர்ந்த ஜெனிபர் பாரெட்டோ கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். 

மிஸ் யுனிவர்ஸ் 2026 ஜெனிஃபர் பாரெட்டோ
 
டொமினிகன் குடியரசின் மெலிசா நியூனெஸ் மற்றும் வெனிசுலாவின் கிளாரா கோட்ஸ் ஆகியோரைத் தோற்கடித்து, போர்ட்டோ ரிகோவின் ஜெனிஃபர் பாரெட்டோ 2026 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். இந்த வெற்றியின் மூலம், போர்ட்டோ ரிகோவிலிருந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற ஆறாவது பெண்மணி என்ற பெருமையை பாரெட்டோ பெற்றுள்ளார். மரிசோல் மலாரெட் (1970), டெபோரா கார்தி-டியூ (1985), தயனாரா டோரஸ் (1993), டெனிஸ் குவினோன்ஸ் (2001) மற்றும் சுலேகா ரிவேரா (2006) உள்ளிட்ட அந்நாட்டின் முன்னாள் வெற்றியாளர்களின் பட்டியலில் இவரும் இணைகிறார். ஜெனிஃபர் பாரெட்டோ, 116 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை வென்று, மிஸ் யுனிவர்ஸ் 2026 ஆக முடிசூட்டப்பட்டார்.

இவருக்கு திருமணமாகி 7 வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில், இச்சாதனை மூலம், பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் திருமணமான பெண் மற்றும்  தாய் என்ற பெருமையை பெற்றதோடு, புதிய வரலாறையும் அவர் படைத்துள்ளார். 21 வயதான ஜெனிஃபர் பாரெட்டோ  இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டி வரை திருமணமாகாத பெண்கள் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். போட்டிக்கு முன்பு போட்டியாளர்கள் திருமணம் செய்திருக்கக் கூடாது என்றும், அவர்கள் போட்டியிடும் ஓராண்டு காலத்தில் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்றும் விதிமுறைகள் இருந்தன. அடுத்த ஆண்டு, அதிகபட்ச வயது வரம்பை நீக்குவதற்காக விதிகள் மீண்டும் திருத்தப்பட்டன. அதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 29 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் போட்டியிட முடிந்தது குறிப்பிடதக்கது.