கொரோனா சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை இறப்பு விகிதத்தை குறைக்கவில்லை – உலக சுகாதார அமைப்பு

கொரோனா சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை இறப்பு விகிதத்தை குறைக்கவில்லை – உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: கொரோனா சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்துவதை நிறுத்துவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது மலேரியா நோய்க்கான பிரதான தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பு கொரோனாவுக்கு இந்த மாத்திரையை பயன்படுத்த தற்காலிக தடை விதித்தது. பின்னர் கடந்த வாரம் அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

கொரோனா சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை இறப்பு விகிதத்தை குறைக்கவில்லை – உலக சுகாதார அமைப்பு

இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையில் வழங்கப்பட்டு வந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பற்றிய சோதனைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனெனில் இந்த மாத்திரை கொரோனா நோய்த் தொற்றில் இறப்பு விகிதத்தை குறைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆகவே கொரோனா சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்துவதை நிறுத்துவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.