அமெரிக்காவில் விமானம் - ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதி விபத்து - 19 பேர் பலி

 
us

அமெரிக்காவில் சிறிய ரக விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

அமெரிக்காவின் வாஷிங்டனில் ரொனால்டு ரீகன் விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்க முயன்றது. அப்போது அந்த வழியாக நடுவானில் வந்துகொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் மீது விமானம் எதிர்ப்பாராதவிதமாக மோதி மோதி ஆற்றில் விழுந்தது. விமானத்தில் பயணித்தவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.   விமானம் ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்த 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு அதிகாரிகள்ள் விசாரணை நடத்தி வருகின்றனர்.