உயிரியல் பூங்காவில் இருந்து தப்பிய 5 சிங்கங்கள் மீட்பு

 
l

 உயிரியல் பூங்காவில் இருந்து ஐந்து  சிங்கங்கள் தப்பி சென்றல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டது .  பின்னர் சிங்கங்கள் மீட்கப்பட்டுள்ளதால் பதற்றம் குறைந்துள்ளது.

அச்

ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா உள்ளது.   இந்த உயிரியல் பூங்கா நேற்று காலையில் பார்வையாளர்களுக்காக திறக்கப்படுவதற்கு முன்பாக வழக்கம் போல் ஊழியர்கள் விலங்குகளை ஆய்வு செய்து வந்துள்ளனர்.  அப்போது கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சிங்கங்கள் மாயமாகி இருப்பது கண்டு ஊழியர்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.  

 அதன் பின்னர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது ஐந்து சிங்கங்களும் கூண்டிலிருந்து  வெளியேறி தப்பி சென்றது தெரிய வந்திருக்கிறது.  இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.  

 சிங்கம் தப்பி சென்று இருக்கும்போது உயிரியல் பூங்காவில்  பார்வையாளர்கள் யாரும் இல்லை.  ஆனாலும் பாதுகாப்பு கருதி உயிரியல் பூங்கா உடனடியாக மூடப்பட்டது.   தப்பி ஓடிய சிங்கங்களை தேடும் பணியில் உயிரியல் பூங்கா ஊழியர்கள் தீவிரம் காட்டி வந்தனர்.   தப்பிச்சென்ற சிங்கங்கள் உயிரியல் பூங்காவுக்கு அருகே சுற்றித்திரிந்தது ஊழியர்கள் கண்டுபிடித்து விட்டனர்.  அதன் பின்னர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அந்த சிங்கங்களை பாதுகாப்பாக கூட்டுக்குள் கொண்டு விடப்பட்டுள்ளன. இதை அடுத்து சிட்னி நகரில் பதட்டம் தணிந்து இருக்கிறது. 

ழ்

 கூண்டிலிருந்து சிங்கங்கள் எப்படி தப்பி சென்றது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள்  உயிரியல் பூங்கா அதிகாரிகள்.

 கடந்த 2009 ஆம் ஆண்டிலும் இதே போல் இந்த உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு சிங்கம் தப்பி சென்று விட்டது.  அந்த சிங்கம் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தியதை அடுத்து சுட்டுக் கொல்லப்பட்டது.  ஆனால் தற்போது தப்பிச் சென்ற ஐந்து சிங்கங்களால் பொதுமக்களுக்கு ஏதும் ஆபத்து ஏற்படாமல் மீண்டும் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.