’ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்துவிட்டால்’ - எலன் மஸ்க்கின் ட்வீட்டால் பரபரப்பு..

 
’ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்துவிட்டால்’ -  எலன் மஸ்க்கின் ட்வீட்டால் பரபரப்பு..

‘ஒரு வேளை நான் மர்மமான முறையில் இறந்துவிட்டால்’ என எலன் மஸ்க் ட்வீட் செய்திருப்பது  இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

  ஸ்பேஸ் எக்ஸ்., டெஸ்லா நிறுவனங்களின்  தலைமை செயல் அதிகாரியும்,  உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும்  இருந்துவரும் எலான் மஸ்க்,  தற்போது ட்விட்டர் நிறுவனத்தையும் வாங்கியிருக்கிறார்.  முதலில்  ட்விட்டரின் சுமார் 9.2 சதவீத பங்குகளைக் மட்டுமே வாங்கியிருந்த எலன் மாஸ்க்,  பின்னர்  ட்விட்டர் நிறுவனத்தையே  வாங்கி விட்டார். ஒவ்வொரு ட்விட்டர் பங்குக்கும், தலா 4 ஆயிரத்து 154 ரூபாய் என மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க அவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.  

’ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்துவிட்டால்’ -  எலன் மஸ்க்கின் ட்வீட்டால் பரபரப்பு..

அவ்வப்போது  வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் எதையாவது ட்வீட் செய்து சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் எலான் மஸ்க், தற்போது  ‘நான் ஒருவேளை இறந்துவிட்டால், உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வேகமாக  பரவை வருவதோடு  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  எலான் மஸ்க் முன்னதாக தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்  செயற்கைகோள் மூலம் அந்நாட்டிற்கு ப்ராட்பேண்ட் இணைய சேவையை வழங்கி வருகிறார்.  ரஷ்ய படைகள்  இணைய சேவையை தாக்கி அழித்து வருவதன் காரணமாக, ஸ்டார்லிங்  திட்டம்  மூலம் இணைய சேவை வழங்கும்படி உக்ரைன் அரசு எலன் மஸ்கிடம் கோரிக்கை விடுத்திருந்தது.  

’ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்துவிட்டால்’ -  எலன் மஸ்க்கின் ட்வீட்டால் பரபரப்பு..

இதன்காரணமாக ரஷ்ய அரசு மஸ்கிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.  இந்த அறிக்கையையும், எலன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த அறிக்கையில், உக்ரேனிய கடற்படையினருக்கும், மரியுபோலில் உள்ள போராளிகளுக்கும் ஹெலிகாப்டர் மூலமாக ஸ்டார்லிங் டெர்மினல்கள் வழங்கப்படுவது தெரியவந்திருக்கிறது. என்ன முட்டாள் தனமாக நடந்துகொண்டாலும் ,  இதற்கான முழு பொறுப்பையும் எலன் மஸ்க் ஏற்க வேண்டியிருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  உக்ரைனுக்கு உதவுதால் ரஷ்யா விடுத்திருக்கும் இந்த எச்சரிக்கை காரணமாகவே மஸ்க்,  மர்மமான  முறையில் இறந்துவிடலாம் என ட்வீட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.