ட்விட்டரை வாங்கியாச்சு.. அடுத்த டார்கெட் கோகோ கோலா நிறுவனம் தான் - எலான் மஸ்க் பதிவு..

 
ட்விட்டரை வாக்கியாச்சு.. அடுத்த டார்கெட் கோகோ கோலா நிறுவனம் தான் -  எலான் மஸ்க் பதிவு..


டிவிட்டர் நிறுவனத்தை  வாங்கியதை அடுத்து எலான் மஸ்க் அடுத்தடுத்து அதிரடி பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.  கோகோ கோலா மற்றும் மெக்டொனால்ட் நிறுவனத்தை வாங்கவுள்ளதாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவுகள் வைரலாகி வருகின்றனர்.  

ஸ்பேஸ் எக்ஸ்., டெஸ்லா நிறுவனங்களின்  தலைமை செயல் அதிகாரியும்,  உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும்  இருப்பவர் எலான் மஸ்க். இவர் அண்மையில் சத்தமில்லாமல் டிவிட்டர் நிறுவனத்தை முழுவதுமாக கைப்பற்றியிருக்கிறார்.  கடந்த சில நாட்களாகவே ட்ரெண்டிங்கில் இருந்துவரும் செய்தியே இதுதான்.  முதலில்  சுமார் 9.2 சதவீத பங்குகளைக் மட்டுமே எலான் மஸ்க் வாங்கியிருந்தார்.  டிவிட்டர் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரராக உருவெடுத்துள்ள எலான் மஸ்கை,    நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர்க்க ட்விட்டர் நிறுவனம் விருப்பம் தெரிவித்திருந்தது.  ஆனால் அதற்கு எலன் மஸ்க் மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்பட்டது.

ட்விட்டர்

 ட்விட்டர் நிறுவனத்தின் போர்டு மெம்பராக இருந்து வந்த அவரால் , 14.9 சதவீத பங்குகளை மட்டுமே வாங்க முடியும்... இந்த பங்கை வைத்துக்கொண்டு ட்விட்டரின் நிர்வாக முடிவுகளில் அவரால் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஆகையால்  ட்விட்டர் நிறுவனத்தையே  வாங்க எலான் மஸ்க் முடிவெடுத்தார்.  இதனையடுத்து  திரைமறைவில் நடந்த பேச்சுவார்த்தையில் 3.37 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் இறுதியானது .  பின்னர்  ட்விட்டரில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி,  முன்னெப்போதும் இருந்ததை விட சிறப்பாக்க  போவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

​ட்விட்டரை வாக்கியாச்சு.. அடுத்த டார்கெட் கோகோ கோலா நிறுவனம் தான் - எலான் மஸ்க் பதிவு..

இந்த அலை ஓய்வதற்கு முன்னதாக , தொடர்ந்து ட்வீட்களை வெளியிட்டு  வரும் எலான் மஸ்க், தான் அடுத்து வாங்க உள்ள கம்பெனி குறித்து குறிப்பிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை.. அவர் சர்காஸ்டிக் ஆகத்தான்  பதிவிட்டிருக்கிறார்.  எலான் தனது ட்வீட்டில்,   "நான் அடுத்து கோகோ-கோலா வாங்கவுள்ளேன் மீண்டும் கொக்கைன் சேர்க்க" என்று குறிப்பிட்டுள்ளார்.  மேலும் , "நான் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தை வாங்கி ஐஸ் கிரீம் மெஷின்களை சரி செய்ய போகிறேன்" என ஏற்கெனவே பதிவிட்டிருந்ததை மீண்டும் பகிர்ந்து " என்னால் அதிசயங்கள் நிகழ்த்த முடியாது" என  தெரிவித்திருக்கிறார்.  

ட்விட்டரை வாக்கியாச்சு.. அடுத்த டார்கெட் கோகோ கோலா நிறுவனம் தான் -  எலான் மஸ்க் பதிவு..

எலான் விளையாட்டாக பதிவிட்டிருந்தாலும் , கள நிலவரம் என்னவென்றால் கோகோ கோலாவின் சந்தை மதிப்பு 284 பில்லியன் டாலர்கள். ஆனால்   எலானின் நிகர மதிப்பாக சொல்லப்படுவதே 269 பில்லியன் டாலர்கள்தான்.  இருந்தபோதிலும்  eலான் மஸ்கை நம்ப முடியாது.  ஏனெனில்  2017-ல் ட்விட்டர் என்ன விலைன்னு கேட்டவர்,   5 வருடங்களுக்கு பிறகு அதனை வாங்கவும் செய்திருக்கிறார். ஆகையால் அவரது அடுத்த டார்கெட் கோகோ கோலா நிறுவனமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 


 


 

null