ட்விட்டரில் இனி பயனர்களுக்கு கட்டணம் - எலான் மஸ்க் அறிவிப்பு

 
ட்விட்டரில் இனி பயனர்களுக்கு கட்டணம் - எலான் மஸ்க் அறிவிப்பு

இனி ட்விட்டர் பயனர்களுக்கு கட்டணம்  வசூலிக்கப்படலாம் என்று அந்நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.  

 அண்மையில்  டிவிட்டர் நிறுவனத்தை முழுவதுமாக கைப்பற்றினார் எலான் மஸ்க்..  ஸ்பேஸ் எக்ஸ்., டெஸ்லா நிறுவனங்களின்  தலைமை செயல் அதிகாரியும்,  உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும்  இருந்துவரும் எலான் மஸ்க்,  முதலில்  சுமார் 9.2 சதவீத பங்குகளைக் மட்டுமே எலான் மஸ்க் வாங்கியிருந்தார்.  ட்விட்டர் நிறுவனத்தின் போர்டு மெம்பராக இருந்து வந்த அவரால் , 14.9 சதவீத பங்குகளை மட்டுமே வாங்க முடியும்.  இந்த பங்கை வைத்துக்கொண்டு ட்விட்டரின் நிர்வாக முடிவுகளில் அவரால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதால்   ட்விட்டர் நிறுவனத்தையே  வாங்கி விட்டார்.

ட்விட்டர்

அதன்படி ஒவ்வொரு ட்விட்டர் பங்குக்கும், தலா 4 ஆயிரத்து 154 ரூபாய் என மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க அவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.  ட்விட்டரை வாங்குவதற்காக,  டெல்ஸா நிறுவனத்தின் பங்குகளை சுமார் 63 ஆயிரம் கோடி ரூபாய்க்கு எலான் மஸ்க் விற்றும், கூடுதலாக  அடமானம் வைத்து சுமார்  93 ஆயிரம் கோடி ரூபாயும்,  கடனாக 95 ஆயிரம் கோடி ரூபாயும் எலான் மஸ்க் வாங்கியிருக்கிறார்.  ட்விட்டர் கைமாறிய பிறகு , சி இஓ பாரக் அகர்வால் பதவி நீக்கம் செய்யப்பட்ட போன்றவற்றால், அதன்  எதிர்காலம் என்னவாகும் என்கிற அச்சம் எழுந்துள்ளது.

ட்விட்டரில் இனி பயனர்களுக்கு கட்டணம் - எலான் மஸ்க் அறிவிப்பு

 ட்விட்களுக்கு பணம் வசூலிக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக, ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.  தற்போது எலான் மஸ்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,  ட்விட்டர்  சாதாரண பயணர்களுக்கு எப்போதும் இலவசமாகவே இருக்கும் என்றும், ஆனால் வர்த்தக மற்றும் அரசு பயனர்களுக்கு சிறிய கட்டணம் வசூலிக்கப்படலாம்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள ட்விட்டர் பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.