எலான் மஸ்கிற்கு அமெரிக்க அமைச்சரவையில் பதிவி - டிரம்ப் அதிரடி!

 
elon musk

எலான் மஸ்கிற்கு அமெரிக்க அமைச்சரவையில் பதிவி வழங்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று அமெரிக்காவின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  2016ல்  நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று முதன் முறையாக அதிபரான டிரம்ப் அதன்பிறகு 2020ல்  தோல்வியடைந்தார். இந்த முறை 2024ல்  நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று 2வது முறையாக அதிபராகி ‘கம்பேக்’ கொடுத்துள்ளார். இவருடைய வெற்றிக்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணம் எலான் மஸ்க் தான் என்கின்றன மீடியாக்கள்.  தேர்தல் களத்தில் டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்த பல இடங்களில் அவருடன் வந்து அவருக்காகப் பேசி வாக்குகளையும் சேகரித்துக் கொடுத்தார் மஸ்க். டிரம்ப் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கங்களில் கூட தொடர்ச்சியாக டிரம்ப்க்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சாரம் செய்தார்.   

trump

தொடர் நேரடி பிரச்சாரம், ஆதரவு குரல்கள், பண உதவி என  டிரம்ப் வெற்றிக்கு எலான் மஸ்க் அசுரத்தனமாக உழைத்தார் என்றே கூற வேண்டும். தன்னுடைய வெற்றிக்கு பிறகு மஸ்க்கிற்கு முதல் ஆளாக நன்றி தெரிவித்தார். தேர்தல் வெற்றிக்கு மிகவும் முக்கியமான நபர் எலான் மஸ்க் தான். அவருக்கு நான் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அவரைப்போல ஒரு நபரை நாம் எந்த நேரத்திலும் விட்டுவிடக்கூடாது. அவரை போல இருக்கும் நல்ல மனிதர்களைப் பாதுகாக்க வேண்டும் என டிரம்ப் நெகிழ்ச்சியுடன் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்த நிலையில், எலான் மஸ்கிற்கு அமெரிக்க அமைச்சரவையில் பதிவி வழங்க டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி அரசாங்கத் திறன் துறையை (D.O.G.E.) வழிநடத்துவார்கள் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தனது வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்த டொனால்ட் டிரம்புக்கு நன்றி கடன் தெரிவிக்கும் வகையில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க டொனால்ட் டிரம் முடிவு செய்துள்ளார்.