உலகம் அழியப்போவதாக கூறிய எபோ நோவா கைது!
உலகம் அழியப்போவதாக கூறி மக்களிடம் பணம் பெற்று பேழைகளை கட்டி வந்த எபோ நோவா கைது செய்யப்பட்டார்.

கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ஆம் தேதி ஒரு ராட்சத வெள்ளத்தின் மூலம் கடவுள் உலகத்தை முடிவுக்கு கொண்டு வரப் போவதாக, தன்னை தானே தீர்க்கத்தரிசி என சொல்லி மக்களிடையே பீதியை ஏற்படுத்திய எபோ நோவா என்பவரை கானா நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர். எபோ நோவா மழுப்பலாக வீடியோ வெளியிட்ட நிலையில் அவரை பொது அமைதிக்கு குந்தகம் விளைப்பதாக கூறி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆரம்பத்தில் மக்களை காப்பாற்ற பேழை கட்டுவதாக சொல்லி வந்த இவர், தனது பிரார்த்தனையை கேட்டு உழக அழிவை இயேசு தள்ளிப்போட்டுள்ளதாகவும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமின்றி உலக அழிவுக்கு பின் பூமியில் மீண்டும் மக்களை குடியமர்த்த பைபிளில் வருவது போன்ற 8 நோவா பேழைகளை கட்ட கடவுள் பணித்திருப்பதாகவும் அவர் கூறினார். அவரை பின் தொடர்பவர்கள் தங்களது சொத்துக்களை விற்று அவருக்கு பணம் அளித்து வந்தது குறிப்பிடதக்கத்.


